எரிபொருள் விநியோகம் குறித்து உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

எரிபொருளை விற்பனை மற்றும் விநியோகிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பான விளக்கம் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜூன் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 10 ஆம்திகதிவரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என கடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்தார்.

இந்நிலையில், மின்சாரம் வழங்கல் தொடர்பிலான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம், வைத்தியசாலைகள், மருந்தகங்கள், நோயாளர் சார்ந்த அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.