எரிபொருள் நிலையத்தில் நபரொருவரை காலால் உதைத்த இராணுவ அதிகாரி குறித்து விசாரணை ஆரம்பம்!

குருநாகல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமக்களை உதைக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பிரதேசங்களிலும் பொதுமக்கள் எரிபொருள் வரிசையில் பலநாட்கள் காத்திருப்பது வழமையான நிகழ்வாகும்.

இந்நிலையில், தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை கட்டுப்பாடுகளுடன் விநியோகிக்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்ததுடன், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தன்னிடம் உள்ள எரிபொருளை தனது நிரப்பு நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் அத்துமீறல் சம்பவங்கள் பதிவாகியதையடுத்து, ஒழுங்கான முறையில் எரிபொருளை விநியோகிக்க பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளை ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய ​​குருநாகல், யக்கஹாபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளின் கடமைகளுக்கு சிலர் இடையூறு விளைவிப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

இதன்படி, இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ள சம்பவம் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட சம்பவம் என்பதுடன் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.