செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு நிதி கிடைக்கும் வகையில், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை துரிதப்படுத்துமாறு, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவிடம் கோரியதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் பிரதிநிதிகளை விரைவில் இலங்கைக்கு அனுப்புமாறும் பிரதமர், கோரியுள்ளார்.
நேற்று அவருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே பிரதமர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்த பிரதிநிதி குழு நாட்டை வந்தடைந்தவுடன் பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முடியும்.
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட ஒப்பந்ததத்தை நிறைவு செய்வதன் மூலம் நிதி தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த நெருக்கடியான நிலையில், இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விருப்பம் வெளியிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment