நாட்டை வந்தடைந்துள்ள கப்பல் ஒன்றிலிருந்து டீசலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தமது ட்விட்டர் பதிவொன்றில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, 18,825 மெட்ரிக் டன் டீசல், 42 மெட்ரிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் 33,498 மெட்ரிக் டன்னும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 13,067 மெட்ரிக் டன்னும் கையிருப்பில் உள்ளது.
இதுதவிர, 386 மெட்ரிக் டன் ஜெட் ஏ1 ரக எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், டீசல், மண்ணெண்னை மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக இன்றைய தினமும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தததாக எமது செய்தித்தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, லாப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Post a Comment