லிட்ரோவின் புதிய தலைவர் வெளியிட்ட தகவல்

தற்போது தரையிறங்கும் எரிவாயு கப்பலை தவிற, மேலதிகமாக அடுத்த சில நாட்களுக்கு தேவையான எரிவாயுவை இறக்குமதி செய்யும் வேலைத் திட்டம் எதையும் முன்னைய நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (ஜூன் 15) காலை பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு கவலைக்குரிய செய்தியாக இருந்தாலும், அதை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் நான் இருக்கின்றேன். இந்த கப்பல் வந்ததில் இருந்து, அடுத்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு கப்பல் கூட திட்டமிடப்படவில்லை.


இது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது.

பேச்சுவார்த்தை மட்டத்தில் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு வழங்குனர்களுக்கு கப்பலை வழங்க 14 நாட்கள் ஆகும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன் இரண்டு எரிவாயு கப்பல்களை கொண்டு வர முடியுமா என்று பார்ப்போம்.

நெருக்கடியைத் தீர்க்க லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு என்னால் தலைமை தாங்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.