இலங்கையில் தற்போது காணப்படும் எரிபொருள் வரிசையை குறைப்பதற்காக இராணுவத்தின் உதவியுடன் நாளை (27) முதல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, டோக்கன் விநியோகிக்கப்படும் போது அவர்களின் கைபேசி இலக்கங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இதனூடாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைத்ததும் டோக்கன் முறைமையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு எரிபொருள் வழங்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிசக்தி அமைச்சுக் காரியாலயத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Post a Comment