நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு சேவை வரி அதிகரிப்பு; ரீலோட், பிற்கொடுப்பனவு பொதிகளுக்கான கட்டணங்களிலும் மாற்றம்

இன்று நள்ளிரவு (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு சேவை வரி 11.25% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படுவதாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜூன் 01ம் திகதி முதல் பெறுமதி சேர் (VAT) வரி 8% இலிருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இணைய பொதிகளுக்கான கட்டணங்களுக்கு தொலைத்தொடர்பு வரி பொருந்தாது என்பதுடன், அதிகரிக்கப்பட்ட 4% VAT சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, தொலைபேசிக் கட்டணங்கள் இன்று நள்ளிரவு (04) முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் Dialog நிறுவனம் அதன் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணங்கள் மற்றும் பொதிகளுக்கான மீள் நிரப்பல் தொகைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.



Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.