புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, இலங்கையில் இருந்து யாத்திரீகர்களை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக யாத்திரீகர்களை அனுப்பாதிருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, இலங்கையில் இருந்து ஆயிரத்து 585 யாத்திரீகர்களை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, இலங்கையில் இருந்து யாத்திரியர்களை அனுப்புவது தொடர்பில், விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது
குறித்த கூட்டம், கலாசார அலுவல்கள் மற்றும் புத்தசாசன அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் டொலர் பற்றாக்குறைக்கு மத்தியில் ஹஜ் செல்வோருக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில், சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷர்ரப் முதுநபீன், மர்ஜான் பளீல், காதர் மஸ்தான், பைஸல் காஸிம், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஹஜ் முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வதில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிகளவான நிதி வௌிப்பாய்வதில் உள்ள நிலைமைகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment