எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

எரிபொருள் தட்டுப்பாடுக்கு மத்தியில், வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தாம் எரிபொருளை பெற்றுத்தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

எனவே, குறித்த வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும், அவர்கள் குறித்த தகவல்கள் அறிந்திருப்பின் தமக்கு அறியப்படுத்துமாறும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மகரகம பகுதியில் இடம்பெற்ற இவ்வாறான மோசடி சம்பவம் ஒன்று  நேற்று பதிவாகியிருந்தது.

மகிழுந்தில் வரிசையில் காத்திருந்த நபரிடம் எரிபொருள் பெற்றுத்தருவதாக கூறி ஒருவர் பணம் பெற்றுள்ளார்.

எரிபொருளை எடுத்து வரும் வரையில் காத்திருக்குமாறு கூறி குறித்த சந்தேகநபர் 40 லீற்றர் எரிபொருளுக்கான பணத்தை பெற்றுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், சந்தேகம் ஏற்பட்டதையடுத்து காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில், காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.