எரிபொருள் கப்பலின் வருகை தாமதமாகும்; எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அறிவித்தல்

40 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாகி வருகைதருமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து வலுச்சக்தி அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

எரிபொருள் கப்பலொன்று 40 ஆயிரம் மெற்றிக்தொன் 92 ரக பெற்றோலை ஏற்றிய நிலையில் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறித்த எரிபொருள் கப்பல் ஒருநாள் தாமதமாக நாளை நாட்டை வந்தடையவுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் விநியோகிக்கப்படும்.

இருப்பினும் ஓட்டோ டீசல் நாடளாவிய ரீதியில் தாராளமாக விநியோகிக்கப்படும். ஆனால் சுப்பர் டீசல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.