சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

இன்றைய தினம் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் எரிவாயு கொள்கலன் விநியோகம் இன்று வரை இடைநிறுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

நாளை மறுதினம் முதல் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மாத்திரம் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.