ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்திய சேவைகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய நேற்று முதல் அமுலாகும் வகையில், 2285/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சாரம் விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களை பராமரித்தல், பாதுகாத்தல், போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியன தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.