கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு

கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய வைரஸ் நாட்டில் இதுவரை கண்டறியப்படவில்லை என வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

BA 5 என்று பெயரிடப்பட்ட இந்த புதிய வைரஸை மிகுந்த அவதானத்துடன் பரிசோதித்து வருவதாக தெரிவித்துள்ள வைத்தியர் சந்திம ஜீவந்தர, இந்த புதிய வைரஸ் 63 நாடுகளில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸ் ஏனைய வைரஸ்களை விட வேகமாகப் பரவுகிறது என்றும், முந்தைய கொவிட் 19 வைரஸின் திரிபுகளை விட அதிகமாகப் பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.