வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்களாக வங்கிகளின் ஊடாக மாத்திரம் அனுப்புமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அரசாங்கத்தின் தலையீட்டில் தொழில்வாய்ப்புப் பெற்றுக்கொண்டவர்களுக்கான விமானப் பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வு நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்றது.


இதன்போது கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கையின் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க கடன் வழிகள் அன்றி வேறு வழிகளில் நாட்டுக்குள் டொலர்களை கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

ஆகவே, வெளிநாடுகளில் பணியாற்றுவோர் தங்களால் முடிந்த வரை டொலர்களை நாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள். அதிலும் வங்கிகள் ஊடாக அனுப்பினால் மாத்திரமே அது நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு உறுதுணையாக அமையும் என தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.