முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களுளில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உடன் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

அத்துடன், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது பொறுத்தமானது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.