நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முடக்கம் அல்லது ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதியும் பிரதமரும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Post a Comment