இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைத் தணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள திரவ சமையல் எரிவாயு கொண்ட கப்பலை விடுவிக்க பணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயுவை இறக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் டீசலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்றுக்காக முன்பதிவு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
Post a Comment