எதிர்வரும் வாரம் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 20 முதல் 24 வரை போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத கிராமப்புற பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, அந்தப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரத்திலும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடமைக்கு சமூகமளிப்பதில் ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுப்பில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் கொள்கையை கடைப்பிடிக்குமாறும் கல்வி அமைச்சு இந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அதேபோல், கடந்த வாரம் பாடசாலைகள் இல்லாத நகர்ப்புற பாடசாலைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் பாடசாலைகளை நடத்த உத்தரவிடப்பட்டு, ஆரம்பப்பாடசாலை நடவடிக்கைகளுக்கான பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் சமுகமளிக்காத நாட்களில், சம்பந்தப்பட்ட கல்வி நடவடிக்கைகளை இணையவழி முறை மற்றும் வீட்டுச் செயல்பாடுகள் மூலம் நடத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.