5 வயது மகனை ஆற்றில் தள்ளிவிட்ட தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

வத்தளை, ஹெந்தல கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரை துறக்க முயன்ற பெண் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வத்தளை -ஹெந்தல - கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரை துறக்க முயன்ற குறித்த பெண் வத்தளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இப்பெண் நேற்று இரவு 7.30 அளவில் தனது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, வீதியால் பயணித்த நபரொருவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அவர் ஹெந்தலை காவலரணில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வத்தளை காவல்துறையினரால் கைதுசெய்து அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க படகுகள் மூலம் கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.