வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் களனி ஆற்றிற்குள் தனது 5 வயது பிள்ளையை வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்றையதினம் (16) வெலிசறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வத்தளை, ஹெந்தலை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், நேற்று (15) இரவு ஊன்று கோலுடன் கதிரான பாலத்திற்கு அருகில் வந்த பெண், 5 வயது சிறுவன் ஒருவனை களனி கங்கைக்குள் வீசிவிட்டு, தானும் கங்கைக்குள் குதிக்க முயன்ற நிலையில், பிரதேசவாசிகள் அவரை தடுத்து, அப்பகுதியில் வீதித் தடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிரந்த பொலிஸ் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
காணாமல் போன 5 வயது சிறுவனை தேடும் நடவடிக்கையை கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுவன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் எதற்காக இக்காரியத்தைச் செய்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment