காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி அலரிமாளிகை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் டான் பிரியசாத்தை கைது செய்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment