பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் தமது ஆதரவாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், தம்மை நம்பி இந்த நாட்டில் உள்ள 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை மீற தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தாய்நாட்டை முன்னிறுத்தி முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக முன்னெடுக்கும் இந்த அரசியல் இயக்கத்தை விட்டு விலகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும்,

சவால்களை முறியடித்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு தன்னால் இயன்றதை தொடர்ந்து செய்வேன் என்று பிரதமர் மேலும் கூறினார்.

இதேவேளை, இன்று முற்பகல் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகை முன்பாக கூடிய குழுவினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்து அங்கு பதற்ற நிலையும் ஏற்பட்டிருந்தது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.