சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் சஜித் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் தாம் நடத்தும் கலந்துரையாடலின் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (08) காலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உள்ள 11 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் இன்று காலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகளை சந்தித்தனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்க அலுவலகத்தில் இன்று காலை இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.