நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச்செல்ல தேசிய மக்கள் சக்தியின் இரண்டு யோசனைகள்

ஜனாதிபதி தமது பதவியில் இருந்து விலகி பதில் ஜனாதிபதியாக சபாநாயகரை நியமித்ததன் பின்னர், நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டு செல்லக் கூடிய இரண்டு யோசனைகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த யோசனைகளை முன்வைத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை 6 மாத காலத்திற்காக ஸ்தாபித்தல் அதில் ஒரு யோசனையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஏனையக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் பொது வேலைத்திட்டங்களுக்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு முடியாவிடின் 6 மாத காலப்பகுதிக்காக இடைக்கால அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப ஏனையக் கட்சிகளுக்கு வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடைக்கால அரசாங்கத்தில் தேசிய மக்கள் சக்தி பங்கெடு;க்காது எதிர்கட்சியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் நிபந்தனை விதித்துள்ளது. இடைக்கால அரசாங்கமோ அல்லது ஏனைய நிர்வாக கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்கோ ஜனாதிபதி தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.