அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை என்பன ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அவை கையளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் இது தொடர்பில் வினவப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையையும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையையும் சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் கூறினார்.
Post a Comment