இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய இரு தினங்களில், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
7,500 மெட்ரிக் டொன் கொண்ட இரண்டு எரிவாயுக் கப்பல்கள் தற்போது இலங்கையை நோக்கி வருவதாகவும், ஒரு கப்பல் நாளை (27) வரும் என்றும், மற்றைய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (29) வரும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்த இரண்டு கப்பல்களுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
குறித்த கப்பல்கள் வந்த மறுதினம் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முறையற்ற வகையில் எரிவாயுவை சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும், அதிக விலைக்கு எரிவாயுவை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment