லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கை இன்று பிற்பகல் முதல் முன்னெடுக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12 தசம் 5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2 தசம் 3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் விநியோகிக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 3 ஆயிரத்து 950 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளது.

இதன்படி, தர பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு குறித்த எரிபொருள் தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இன்று முதக் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ள எரிவாயு சிலிண்டர்களில் 60 வீதமானவை கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வார இறுதியில் 2 ஆயிரத்து 500 மெற்றுக் டொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.