பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் தெரிவு

பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவாகியுள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஆளுந்தரப்பில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரும், எதிர்க்கட்சி தரப்பிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், புதிய பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குச் சீட்டின் மூலம் வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும், இம்தியாஸ் பாக்கிர் மார்க்கர் 65 வாக்குகளையும் பெற்றனர்.

3 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

அதன்படி, மேலதிகமாக வாக்குகளால், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகர் பதவிக்கு தெரிவானதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.