ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமான அனைவரையும் கைது செய்யுமாறு வலியுறுத்துவதோடு, ஜனாதிபதியை பதவி விலகக் கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி பதவி விலகும் வரை தொடர் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவென் ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Post a Comment