கலப்படமான எரிபொருள் - பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிடுள்ள விசேட அறிக்கை

குருநாகல் நாரம்மல நிரப்பு நிலையத்தில் எரிபொருளின் தரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட எரிபொருளின் மாதிரிகள் ஏற்கனவே ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் எரிபொருள் போக்குவரத்து பவுசரை கொலன்னாவ நிலையத்திற்கு எடுத்துச் சென்று தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பௌசர் புறப்படுவதற்கு முன்னர் தம்பதெனிய பிரதேசத்திலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 92 ஒக்டேன் பெற்றோல் கொண்டு செல்லப்பட்டதாக கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.