புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் டுவிட் செய்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், “புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம். அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உடனடியாக ஸ்தாபிப்பதே இந்த நெருக்கடியைக் கையாள்வதற்கான முதற்படியாகும்.
அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் IMF மற்றும் நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment