பிரதமரை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லையென ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, அரசாங்கத்தை மாற்றுவது மற்றும் அதற்கு இலகுவான வழியாக பிரதமர் தமது பதவியில் இருந்து விலகுவதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அது குறித்த உடன்பாடும் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
இது குறித்த இறுதி தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் அறிவிப்பாரென ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.
Post a Comment