நாடளாவிய ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் இன்றிரவு 7 மணிமுதல் நாளை (10) காலை 7 மணிவரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குறித்த ஊரடங்கு நாளை மறுதினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மறு அறிவித்தல் நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.