எரிபொருளின் தரம் குறித்து எரிசக்தி அமைச்சு விளக்கம் - பொதுமக்களின் கவனத்திற்கு...

எரிபொருள் இறக்குமதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது முதல், அதன் விநியோகம் வரையில் நான்கு கட்டங்களில் அதன் தரம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விநியோகிப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் தரம் பற்றி சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சு அறிவித்துள்ளது.

காலி எரிபொருள் விநியோக நிலையம் ஒன்றில் விநியோகிக்கப்பட்ட எரிபொருளின் தரம் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பும் நிலையத்திலுள்ள எரிபொருள் விநியோக தாங்கியில் நிரம்பியிருந்த நிலத்திற்கு கீழ் நீர் அகற்றப்படாது ,எரிபொருள் விநியோகிக்கப்பட்டமை தெரிவந்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் தரம் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்படுமாயின் அதனை தொலைபேசி ஊடாக உறுதிசெய்துக்கொள்ள முடியும். இதற்காக 0115 234 234 அல்லது 0115 455 130 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள மடியும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து எரிபொருளை ஏற்றுமதி செய்வதற்கு முன்னரும் அதன் தரம் பரிசோதிக்கப்படும். இது தொடர்பில் எரிபொருள் வழங்கும் நிறுவனங்களும் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணைந்து சுயாதீன தர பரிசோதனையை மேற்கொள்கின்றன.

கொலன்னாவ, சப்புகஸ்கந்த ஆய்வு கூடங்களிலும் எரிபொருளின் தரம் பரிசோதிக்கப்படுகின்றன. எரிபொருளின் மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டது முதல் அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை உரிய எரிபொருள் விநியோக நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணைந்து சுயாதீன குழுவொன்றை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் எழுமாறாக எரிபொருள் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்றும் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.