அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு வாரகாலத்தை போராட்ட காலமாக அறிவிக்க தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு வாரம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே 11ஆம் திகதி பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும், 17ஆம் திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment