அரச தரப்பு எம்பி தற்கொலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவ நகரில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினரையும், அவரது வாகனத்தையும் தாக்குவதற்கு முயன்றபோது, அவர் தனக்கு தானே துப்பிரயோகம் செய்து மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், அவருடன் வருகைத்தந்த நபரொருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நகர மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை வீதி நடுவே கவிழ்த்து சேதப்படுத்தியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.