மூவரின் உயிரை பறித்த கோர விபத்து

பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியில், மனம்பிட்டிய பிரதேசத்தில் கொடலிய பாலத்திற்கு அருகில் பேருந்து - முச்சக்கர வண்டி விபத்தொன்று பதிவாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த 67 மற்றும் 62 வயதுடைய வயோதிப தம்பதியினரும், 72 வயதுடைய உறவினரொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூவரும் முச்சக்கர வண்டியில் அரலகங்வில - அருணபுர பகுதியிலிருந்து மாத்தளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது முச்சக்கர வண்டி குறித்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பேருந்தின் சாரதி கைது செய்ய்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.