சற்றுமுன்னர் மஹிந்த, நாமல் உட்பட 17 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ மற்றும் சனத் நிஷாந்த ஆகியோரே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.