மொரட்டுவை மேயர் இல்ல பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் - STF வரவழைப்பு

மொரட்டுவை நகர் பகுதியில் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை செலவினம் அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெரும்பாலானவர்கள் பங்கேற்று, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னதாக, மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்தின் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் பதற்றநிலை அதிகரித்து வருகிறது.

நிலமையினை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு காவல்துறையினருக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.