ஜனாதிபதியிடம் நாமல் விடுத்த முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தனது திட்டங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கோபடைந்துள்ளமையின் காரணத்தை தான் புரிந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இது கோபமடைவதற்கான நேரம் அல்ல எனவும், தீர்வைத் தேடுவதற்கான நேரம் எனவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து தாம் மக்களுக்கு அறிவிக்கவில்லை எனும் குற்றச்சாட்டை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காலாவதியான முகாமைத்துவக் கட்டமைப்புடன் முற்போக்கான தலைமைத்துவத்தை முன்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும், ஜனாதிபதியின் தற்போதைய மௌனம் நாட்டின் நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஜனாதிபதி தனது திட்டங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது அவசியம் எனவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினர் நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் குறித்து குரல் கொடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.