ரயில்வே திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

மின் விநியோகம் தடைப்படும் சந்தர்ப்பங்களில் இரயில் கடவைகளை கடக்கும் போது அவதானமாக செயற்படுமாறு இரயில்வே திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின் விநியோகத்தடை காரணமாக குறித்த காலப்பகுதியில் சமிக்ஞை விளக்குகள் செயற்படாது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குறித்த சந்தர்ப்பங்களில் இரயில் கடவைகளை கடப்பது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமிக்ஞை விளக்குகளை ஒளிரச் செய்வதற்கான அமைப்பு காணப்படுகின்ற போதும், மின் விநியோகத்தடை காரணமாக அதனை மீண்டும் தொடர முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.