ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.