பஸ் கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அதற்கமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணமாக 27 ரூபா அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், லங்கா ஐஓசி நிறுவனமும் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரித்தமையே இவ்வாறு பஸ் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment