தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள செய்தி

இலங்கை வாழ் சிங்கள, தமிழ் மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த தினமான இப்புத்தாண்டு தினத்தை பொருளாதார ரீதியான பல கஷ்டங்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு குறிப்பாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் அமைதி, சந்தோஷம், சௌபாக்கியம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பதில் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எஸ். எம் தாஸீம் மௌலவி அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்வேறு சமூகங்களை சார்ந்தவர்கள் வாழும் இந்நாட்டில் ஒருவர் மற்றவரின் மத, கலாச்சார விழுமியங்களைப் புரிந்து கொண்டு, புரிந்துணர்வுடனும் சமாதானமாகவும் நம் நாட்டு மக்கள் அனைவரும் வாழ்வதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் காணப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் நம் நாட்டில் காணப்படும் நெருக்கடியான நிலை நீங்கி, நம் நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.