எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

தங்கொட்டுவ நகரில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு(09), 7 மணியளவில் டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னல – கோனவில பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.