தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்
எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோல் வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைக்கு டீசல் தேவைப்படுமாயின், அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பின் கீழ் அதனை மேற்கொள்ள வேண்டுமென அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி முதல் நேற்று வரை கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் வழங்கப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது.
Post a Comment