திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் தாம் உணவின்றி தவிப்பதாகக் கூறி மஹரகம பொமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘மக்கள் வேடிக்கைக்காக ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள், மக்கள் வாழ வழி இல்லை, அதுதான் அவர்களை வீதிக்கு கொண்டுவருகிறது டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் பேரணியாக செல்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர்.
Post a Comment