போக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம் அறிவிப்பு

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை அஞ்சல் நிலையங்களுக்கு செலுத்துவதற்கு ஏப்ரல் 23 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கை காவல்துறையினரால் விதிக்கப்பட்ட அபராதங்களை, கடந்த 11 மற்றும் 12 ஆகிய திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டமையினால் செலுத்த இயலாமல் போனவர்களுக்கான இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த அபராதங்களை மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி செலுத்துவதற்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 215 (அ) பிரிவின் பிரகாரம், நிதியமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, இந்த அபராதங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

அதன்படி, மார்ச் 29 முதல் ஏப்ரல் 10 வரை (மேற்படி விடுமுறை நாட்கள் உட்பட) வழங்கப்பட்ட அபராத பத்திரங்களை இம்மாதம் 23 ஆம் திகதி வரை எந்த அஞ்சல் அலுவலகம் அல்லது உப அஞ்சல் நிலையங்களில் மேலதிக கட்டணமின்றி செலுத்தலாம் என்று அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.