சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள், சீன தூதுவரை அவசரமாக சந்தித்து கோரியது என்ன?

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இதன்படி, சுயாதீனமாக செயற்படும் 7 உறுப்பினர்களை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்குமாறு, சுயாதீன உறுப்பினர்கள், சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரெலிய ரத்தன தேரர், வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்ஷன யாப்பா, வீரசுமன வீரசிங்க மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோரே இவ்வாறு சீன தூதுவரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.