மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமா? வெளியானது தற்போதை நிலைப்பாடு!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கு இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தேவை, மேலும், கட்டண திருத்தம் செய்தால், திருத்த முன்மொழிவை பொதுமக்களிடம் சமர்ப்பித்து, பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க இன்று(26) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக நேற்றிரவு (25) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.